உலகம்
வடகொரியா அச்சுறுத்தினால் தக்க பாடம் புகட்டப்படும்: அமெரிக்கா எச்சரிக்கை
வடகொரியா அச்சுறுத்தினால் தக்க பாடம் புகட்டப்படும்: அமெரிக்கா எச்சரிக்கை
ஜப்பான் வான்வழியாக வடகொரியா ஏவுகணை செலுத்தியபோது அதை சுட்டுவீழ்த்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜிம் மாட்டீஸ், எதிர்காலத்தில் மீண்டும் இத்தகைய செயலில் ஈடுபட்டால் வடகொரியாவுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் சில முடிவுகளை எடுத்திருக்கிறார். இதன் மூலம் தென் கொரியாவுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. அது என்ன மாதிரியான தாக்குதல் என்பதை தற்போது விவரிக்க முடியாது. தென் கொரியாவுக்கு அமெரிக்காவின் அணு ஆயுதங்களை மீண்டும் எடுத்துச் செல்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது’என அவர் தெரிவித்தார்.