கின்னஸில் இடம்பெற்ற உலகத்திலேயே நீளமான திருமண ஆடை

கின்னஸில் இடம்பெற்ற உலகத்திலேயே நீளமான திருமண ஆடை

கின்னஸில் இடம்பெற்ற உலகத்திலேயே நீளமான திருமண ஆடை
Published on

பிரான்ஸ் நாட்டில் மணமகளுக்கு வடிவமைக்கப்பட்ட திருமண ஆடை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாகவே திருமணத்திற்கு தயாராகும் திருமண பெண்கள் தங்களின் ஆடைகளை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த வகையில்
பிரான்ஸ் நாட்டில் உள்ள பெண் ஒருவர், 8,095 மீட்டர் நீளமுள்ள திருமண ஆடையை தனது திருமணத்திற்கு தேர்வு செய்துள்ளார்.

15 நிறுவனங்களின் கடினமான உழைப்பால், இந்த ஆடையை வடிவமைக்க சுமார் 2 மாதங்கள் ஆகியுள்ளன. இத்தகைய சிறப்பு மிக்க ஆடை தற்போது
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 11 வருடங்களுக்கு முன்பு 1,203.9 மீட்டரில் வடிவமைக்கப்பட்ட திருமண ஆடை கின்னஸில் இடம்பெற்றது.
அதன் பின்பு தற்போது, பிரான்ஸை சேர்ந்த பெண்ணின் திருமண ஆடை அந்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும், இந்த ஆடை, பல்வேறு
நற்செயல்களுக்காக துண்டு துண்டாக வெட்டி ஏலத்திலும் விடப்பட உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com