உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் - ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய நடிகர்

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் - ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய நடிகர்
உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் -  ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய நடிகர்

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த ஒரு நடிகரும் இடம்பிடித்துள்ளார்.

ஆண்டுதோறும் போர்ப்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியலை வெளியிடுகிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் அதிக சம்பளம் பெறும் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் ஹாலிவுட் ஸ்டார் டுவைன் ராக் ஜான்சன் முதலிடத்தை பிடித்துள்ளார். ராக் இந்த ஆண்டில் வாங்கிய சம்பளம் மட்டும் 636 கோடி ரூபாய் ஆகும். இவரை அடுத்து அவெஞ்சர்ஸ் படத்தில் தோர் கதாபாத்திரத்தில் நடித்த கிரிஸ் ஹெம்ஸ்வர்த் 543 கோடி ரூபாயை ஊதியமாக பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார்.

அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி 469 கோடி ரூபாய் சம்பளத்துடன் மூன்றா‌து இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய நடிகர் அக்ஷய்குமார். இவர் 462 கோடி ரூபாய் சம்பளத்துடன் நான்காவது இடத்தில் உள்ளார். ஜாக்கிசான் 412 கோடி ரூபாய் ஊதியம் பெற்று ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார்.

405 கோடி ரூபாய் சம்ப‌ளத்துடன் பிராட்லி கூப்பர் 6ஆம் இடத்தையும் ஆடம் சாண்ட்லர் 7ஆம் இடத்தையும் பிடித்திருக்கின்றனர். கிறிஸ் எவன்ஸ் 309 கோடி ரூபாய் ஊதியத்துடன் 8ஆம் இடத்தை தக்க வைத்துள்ளார். பால் ரட் 291 கோடி ரூபாய் சம்பளம் பெற்று 9ஆம் இடத்திலும், வில் ஸ்மித் 249 கோடி ரூபாய் சம்பளம் பெற்று 10ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com