இலங்கை துயரம்: பலியோனார் எண்ணிக்கையை குறைத்தது இலங்கை அரசு

இலங்கை துயரம்: பலியோனார் எண்ணிக்கையை குறைத்தது இலங்கை அரசு
இலங்கை துயரம்: பலியோனார் எண்ணிக்கையை குறைத்தது இலங்கை அரசு

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 253 என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் அன்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஐநூறுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட வெளிநாட்டை சேர்ந்த 36 பேரும் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 253 மட்டுமே என்று இலங்கை சுகாதாரச் சேவைத் துறை இயக்குநர் அனில் ஜெசிங்க நேற்றிரவு தெரிவித்தார். 359 பேர் இறந்ததாகக் கூறப்பட்டது கணக்கிடுவதில் நேரிட்ட தவறு என்று கூறிய அவர், அடையாளம் காண முடியாத அளவில் உடல்கள் மீட்கப்பட்டதால் இந்த தவறு நேர்ந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். தேவாலயங்களைவிட நட்சத்திர விடுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் உடல்கள் மிகவும் சிதைந்திருந்ததாக கூறிய ஜெசிங்க, உடல் பாகங்களைக் கொண்டு கணக்கிட்டதில் ஏற்பட்ட தவறால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 கூடுதலாக தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com