family
family Ai generated image

குழந்தை பிறப்பு விகிதத்தைக் குறைத்த வளரும் நாடுகள்!

குழந்தை பிறப்பு விகிதத்தைக் குறைத்த நாடுகளில் வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகள் வேகமாக செயல்பட்டிருக்கிறது.
Published on
Summary

6-லிருந்து 3 குழந்தைகள் என்ற விகிதத்தை எட்ட இங்கிலாந்து 95 ஆண்டுகளையும், இந்தியா 55 ஆண்டுகளையும் எடுத்துக் கொண்ட நிலையில், சீனா வெறும் 11 ஆண்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறது.

1965 வரை உலகளாவிய கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 5 குழந்தைகளாக இருந்தது. அதன் பிறகு, இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்து ஒரு பெண்ணுக்கு 2.5 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ளது.

family
தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் இடம்.. எச்சரிக்கும் தரவுகள்!

ஒவ்வொரு பெண்ணுக்கும் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற விகிதத்தை வளர்ந்த நாடுகளை விட வளர்ந்துவரும் நாடுகள் விரைவாகக் குறைத்திருக்கின்றன என்ற தரவுகள் வெளியாகியிருக்கின்றன. ஒரு பெண்ணுக்கு ஆறு குழந்தைகள் என்ற எண்ணிக்கையை 3 குழந்தைகளாகக் குறைப்பதற்கு இங்கிலாந்து 95 ஆண்டுகள் எடுத்திருக்கிறது. அமெரிக்கா இந்த எண்ணிக்கையைக் குறைப்பதற்கு 82 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.

pregnant women
pregnant women web

ஆறு குழந்தைகள் என்ற எண்ணிக்கையை 3 குழந்தைகள் என்ற நிலையை அடைவதற்கு இந்தியாவுக்கு 55 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இந்த எண்ணிக்கையைப் பொறுத்தவரை மலேசியாவுக்கு 37 ஆண்டுகள் ஆயின. குழந்தைப் பிறப்பு விகிதத்தை ஆறிலிருந்து 3 ஆகக் குறைக்க தென்னாப்பிரிக்கா 34 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. பிரேசில் இந்த இலக்கை எட்டுவதற்கு 26 ஆண்டுகளும், வங்கதேசம் 20 ஆண்டுகளும் எடுத்திருக்கிறது.

தென்கொரியா குழந்தைப் பிறப்பு விகிதத்தை ஆறிலிருந்து 3 ஆகக் குறைக்க 18 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இந்த இலக்கை அடைவதற்கு சீனாவுக்கு 11 ஆண்டுகள் எடுத்திருக்கிறது. ஈரான் வெறும் 10 ஆண்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறது .

family
6 முதல் 60 வயது வரை.. அதிகரித்துவரும் ஒற்றைத் தலைவலி.. தீர்வு என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com