போப்பை சந்தித்ததால் தற்கொலை எண்ணத்தில் இருந்து தப்பித்த பெண்

போப்பை சந்தித்ததால் தற்கொலை எண்ணத்தில் இருந்து தப்பித்த பெண்
போப்பை சந்தித்ததால் தற்கொலை எண்ணத்தில் இருந்து தப்பித்த பெண்

போப் பிரான்சிஸை சந்தித்த பின் வாழ வேண்டும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக அமில வீச்சால் பாதிக்கப்பட்ட கொலம்பிய பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவின் போகோடோவில் உள்ள சின்னஞ்சிறிய அறைக்குள் முடங்கி கிடக்கும் இந்த பெண்ணின் பெயர் கார்போடோ. 17 ஆண்டுகளுக்கு முன், கட்டிய கணவரே அமிலத்தை வீசி, அவரது முகத்தை சின்னாபின்னமாக சிதைத்தால், வெளியுலகத்துக்கே தனது முகத்தை காட்டாமல் இருந்தார் கார்போடோ. ஒருகட்டத்தில் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். அப்போது உடனிருந்த பாதுகாவலர் அவரை காப்பாற்றினார். இதைத் தொடர்ந்து கருணைக் கொலை செய்து விடும்படியும் அரசுக்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்த சூழலில் ‌அண்மையில் கொலம்பியா வந்த போப் பிரான்சிஸை சந்தித்து கருணை கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த போப் பிரான்சிஸ் கார்போடோவை துணிச்சல் மிக்க பெண் ‌என பாராட்டியுள்ளார். இதனால், வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற புதிய நம்பிக்கை தனக்குள் பிறந்திருப்பதாக கார்போடோ மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்துள்ளார். அத்துடன் தற்கொலை எண்ணத்தை மாற்றிய போப்புக்கும் மனதார நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com