பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல் - ஆபத்தை ஏற்படுத்துமா?

பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல் - ஆபத்தை ஏற்படுத்துமா?

பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல் - ஆபத்தை ஏற்படுத்துமா?
Published on

பூமியை நோக்கி பிரம்மாண்டமான விண்கல் இம்மாதம் 27ஆம் தேதி வர உள்ளது.

கடந்த 1989-ஆம் ஆண்டு இந்த விண்கல் பூமிக்கு மிக அருகே வந்து சென்றதாகவும் அது 2-ஆவது முறையாக இம்மாத இறுதியில் மீண்டும் வர உள்ளதாகவும் விண்ணியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தின் அளவிற்கு ஈடான இந்த விண்கல் பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடந்து செல்லும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும் இது 25 லட்சம் மைல் தொலைவில் வர உள்ளதால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

1989ஆம் ஆண்டு முதன்முதலாக பூமிக்கு அருகே வந்த இந்த விண்கல்லுக்கு 1989 ஜேஏ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 2186 ஆண்டு வரை பூமிக்கு விண்கற்களால் ஆபத்து எதுவும் இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ’செவ்வாய் கிரகத்தில் ஏலியனா!’ - முக்கோண அமைப்பை கண்டு குழம்பி போன நாசா ஆய்வாளர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com