\
ஒரு கோடி எல்இடி விளக்குகளால் பிரமாண்ட பூங்கா

ஒரு கோடி எல்இடி விளக்குகளால் பிரமாண்ட பூங்கா

ஒரு கோடி எல்இடி விளக்குகளால் பிரமாண்ட பூங்கா
Published on

சீனாவில் ஒரு கோடி எல்இடி வண்ண விளக்குகள் கொண்டு பிரமாண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக பாரம்பரிய வண்ண விளக்குகள் திருவிழா களைகட்டி வருகிறது. சோங்கியிங் நகரில் 123 ஏக்கர் நிலபரப்பில் வண்ணவிளக்குகள் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

அரங்கத்தின் நுழைவாயிலில் எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட டிராகன் பொம்மை, மயில், குதிரை, டைனோசர் போன்றவை காண்போரை பிரமிக்கவைக்கிறது. சாலை எங்கும் வண்ணப் பூக்கள் தொடங்கவிடப்பட்டுள்ளன. சுமார் ஒரு கோடி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள பூங்கா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com