உலகம்
இளவரசி புகைப்படத்தை வெளியிட்ட பிரான்ஸ் பத்திரிக்கைக்கு ரூ.34 லட்சம் அபராதம்
இளவரசி புகைப்படத்தை வெளியிட்ட பிரான்ஸ் பத்திரிக்கைக்கு ரூ.34 லட்சம் அபராதம்
இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனை புகைப்படம் எடுத்து வெளியிட்ட ஃபிரான்ஸ் பத்திரிக்கைக்கு 45 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.34,38,822.98) அபாரதம் விதித்து பாரீஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம் தனது மனைவியான இளவரசி கேத்மிடில்டனுடன் பிரான்ஸ் சென்றிருந்தார். அங்கிருந்த தங்கும் விடுதியில் அவர்கள் தங்கியிருந்தபோது, பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று இளவரசியின் அரை நிர்வாண புகைப்படத்தை எடுத்து சட்டவிரோதமாக வெளியிட்டது. இதுதொடர்பாக வில்லியம்ஸ் - கேத் மிடில்டன் தம்பதியினர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இளவரசியின் புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் உரிமையாளருக்கு தலா 45 ஆயிரம் யூரோ அபராதம் விதித்துள்ளது.