வெள்ள நிவாரணமாக 1 மில்லியன் டாலர்  - டொனால்ட் டிரம்ப்

வெள்ள நிவாரணமாக 1 மில்லியன் டாலர் - டொனால்ட் டிரம்ப்

வெள்ள நிவாரணமாக 1 மில்லியன் டாலர் - டொனால்ட் டிரம்ப்
Published on

அமெரிக்காவில் ஹார்வே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக தனக்கு சொந்தமான ஒரு மில்லியன் டாலர் வழங்குவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு அறிவித்துள்ளார். 

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரம் ஹார்வே புயல் மற்றும் மழை வெள்ளத்தால் முடங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த கனமழை கா‌ரணமாக ஹூஸ்டன் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. பொதுமக்கள் மீட்பு படையினரின் உதவியால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ள நிவாரண நிதியாக, தன்னுடைய பணமான ஒரு மில்லியன் டாலரை வழங்க இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சண்டர்ஸ் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com