தரைதட்டி நிற்கும் ‘எவர்கிரீன்’ கப்பல்... சிக்கிக்கொண்டவர்கள் இந்தியர்கள் எனத் தகவல்!

தரைதட்டி நிற்கும் ‘எவர்கிரீன்’ கப்பல்... சிக்கிக்கொண்டவர்கள் இந்தியர்கள் எனத் தகவல்!

தரைதட்டி நிற்கும் ‘எவர்கிரீன்’ கப்பல்... சிக்கிக்கொண்டவர்கள் இந்தியர்கள் எனத் தகவல்!
Published on

உலகின் நீர் வழி போக்குவரத்தின் முக்கிய சந்திப்பாக உள்ளது சூயஸ் கால்வாய். இந்த கால்வாயில் தற்போது 1300 அடி நீளம் உள்ள எவர்கிரீன் என்ற சரக்கு கப்பல் குறுக்கு பக்கமாக சிக்கிக்கொண்டு நிற்கிறது. அதனால் இந்த கால்வாயில் பிற கப்பல்கள் பயணிக்க முடியாமல் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. இந்நிலையில் ‘எவர்கிரீன்’ கப்பல் குழுவினர் அனைவரும் இந்தியர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

“எவர்கிரீன் கப்பலில் பயணித்த குழுவினர் சுமார் 25 பேரும் பத்திரமாக உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள். சிக்கிக் கொண்டுள்ள கப்பலை மீட்கும் பணியில் மும்முரமாக உள்ளனர்” என Bernhard Schulte கப்பல் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கி நான்கு நாட்கள் ஆகிறது. அதன் காரணம் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்துள்ளன. கப்பலை மீண்டும் மிதக்க செய்ய எப்படியும் ஒரு வார காலத்திற்கும் கூடுதலாக நேரம் எடுக்கும் எனத்தெரிகிறது. “சிரமத்திற்கு மன்னிக்கவும்” என எவர்கிரீன் கப்பலின் உரிமையாளரும், ஜப்பானை சேர்ந்தவருமான ஷோய் கிசென் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். எவர்கிரீன் கப்பல் சீனாவிலிருந்து நெதர்லாந்துக்கு பயணித்துக் கொண்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com