The details of Blue Sparrow missile Israel used to kill Khamenei
அயதுல்லா அலி காமேனிpt web

அலி காமேனி கொல்லப்பட்டது எப்படி? இஸ்ரேல் பயன்படுத்திய ’நீல குருவி’ ஏவுகணையின் சிறப்பு என்ன?

தெஹ்ரானில் அயதுல்லா அலி கமேனியைக் கொல்ல இஸ்ரேல் ப்ளூ ஸ்பாரோ என்ற ஏவுகணையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
Published on

ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலை பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, தெஹ்ரானில் அயதுல்லா அலி கமேனியைக் கொல்ல இஸ்ரேல் ப்ளூ ஸ்பாரோ என்ற ஏவுகணையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தின. தற்போது அஜர்பைஜான் நாட்டின் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. தவிர, தாக்குதல் மேலும் தீவிரமடையும் எனவும், நீண்ட நாட்கள் தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

The details of Blue Sparrow missile Israel used to kill Khamenei
அலி கமேனிஎக்ஸ் தளம்

இந்த நிலையில், அயதுல்லா அலி கமேனியின் படுகொலை பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, தெஹ்ரானில் அயதுல்லா அலி கமேனியைக் கொல்ல இஸ்ரேல் ப்ளூ ஸ்பாரோ என்ற ஏவுகணையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது, ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் உருவாக்கிய இஸ்ரேலிய வான்வழி ஏவுகணையான ப்ளூ ஸ்பாரோ என்று சொல்லப்படுகிறது. இது, நீல குருவி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது, மூன்று வான்வழி ஏவுகணைகளின் குடும்பத்தின் ஒரு பகுதியாகும், இதில் பிளாக் ஸ்பாரோ மற்றும் சில்வர் ஸ்பாரோவும் அடங்கும். ப்ளூ ஸ்பாரோ 6.51 மீட்டர் நீளம் மற்றும் 1,900 கிலோ எடை கொண்டது. இது வரும் அச்சுறுத்தல்கள் தரையில் விழுவதற்கு முன்பே கண்டறிந்து அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான தூரத்திலிருந்து இதை ஏவ முடியும். மேலும் எதிரிகளால் GPS சிக்னல்கள் தடை செய்யப்படும் சூழல்களில்கூட, அசாதாரண துல்லியத்துடன் அதன் இலக்கைத் தாக்க முடியும். பகல் அல்லது இரவு எந்த வானிலையிலும், மேற்பரப்பில் உள்ள இலக்குகளையோ அல்லது நிலத்தடியில் புதைக்கப்பட்ட இலக்குகளையோ இது தாக்கக்கூடியது. வளிமண்டலத்திலிருந்து சிறிது நேரம் வெளியேறி அதன் இலக்கை நோக்கி கிட்டத்தட்ட செங்குத்தாக விழக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது. இதைவைத்தே அலி கமேனியின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டு அவரை இஸ்ரேல் அழித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

The details of Blue Sparrow missile Israel used to kill Khamenei
அலி காமேனி மரணம்.. இந்தியாவில் வாழ்ந்த மூதாதையர்கள்.. ஆச்சர்யமூட்டும் வரலாறு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com