\
உலகின் இந்த நகரங்களில் வாழ்வதற்கான செலவு குறைவு! டாப் 10 நகரங்களில் அகமதாபாத்!

உலகின் இந்த நகரங்களில் வாழ்வதற்கான செலவு குறைவு! டாப் 10 நகரங்களில் அகமதாபாத்!

உலகின் இந்த நகரங்களில் வாழ்வதற்கான செலவு குறைவு! டாப் 10 நகரங்களில் அகமதாபாத்!
Published on

லண்டனைச் சேர்ந்த பிஸினஸ் எகானமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பின் இந்தாண்டுக்கான உலகின் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த நகரங்களின் பட்டியலில் இந்திய நாட்டின் சார்பில் அகமதாபாத் நகரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 

அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள நகரங்கள் குறித்து பார்க்கலாம்... 

சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரம் உலகிலேயே செலவு மிகவும் குறைவாக உள்ள நகரமாகும். இந்நகரம் அந்த நாட்டின் தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கது. திரிபோலி (லிபியா), தாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்), துனிஸ் (துனிசியா) மற்றும் அல்மாட்டி (கஜகஸ்தான்) ஆகிய நகரங்கள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன. 

ஆறாவது இடத்தில் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரம் உள்ளது. ஏழாவது இடத்தில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரம் பிடித்துள்ளது. அல்ஜியர்ஸ் (அல்ஜீரியா), பியூனஸ் அயர்ஸ் (அர்ஜென்டினா), லுசாகா (சாம்பியா) ஆகிய நகரங்கள் எட்டு, ஒன்பது மற்றும் பத்தாவது இடத்தை பிடித்துள்ளன. 

Source : EIU

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com