"முழுமையான தளர்வுகளை அமல்படுத்த வேண்டாம்" - உலக சுகாதார அமைப்பு
கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறைந்தாலும், படிப்படியாக மட்டுமே தளர்வுகளை அமல்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
ஜெனிவாவில் நடந்த உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி கால நிபுணர் டாக்டர் மைக் ரையான், வைரஸின் தாக்கம் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், தனி நபர் இடைவெளி, தூய்மை உள்ளிட்டவற்றை சர்வதேச சமூகம் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தளர்வுகளை படிப்படியாக மட்டுமே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், மீண்டும் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், கட்டுப்பாடுகளை விரைந்து அமல்படுத்தவும் உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்தார்.
மேற்கத்திய நாடுகளில் வைரஸின் தாக்கம் ஓரளவு குறைந்து தளர்வுகள் அமலாகி வரும் நிலையில், ஆப்ரிக்க நாடுகளும் ஆபத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.