அமெரிக்கா: 51 வருடத்திற்கு பின் 'சோடியாக் கொலையாளி'யின் ரகசிய குறிப்புகள் கண்டுபிடிப்பு

அமெரிக்கா: 51 வருடத்திற்கு பின் 'சோடியாக் கொலையாளி'யின் ரகசிய குறிப்புகள் கண்டுபிடிப்பு
அமெரிக்கா: 51 வருடத்திற்கு பின் 'சோடியாக் கொலையாளி'யின் ரகசிய குறிப்புகள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் வட கலிபோர்னியா மாகாணத்தில் ராட்சசன் படத்தில் வரும் சைக்கோ கொலைகாரனை போல சோடியாக் கொலைகாரன் ஒருவன் இருந்துள்ளான். மர்மாமான முறையில் இள வயது ஆண் மற்றும் பெண்களை கொலை செய்து விட்டு அது தொடர்பான விவரங்களை CIPHER கோடில் (ரகசிய குறிப்புகள்) போலீசுக்கும், பத்திரிகைகளுக்கும் அறிவிப்பது அவனது பாணி. 

1970 முதல் 1980 கள் வரை கலிபோர்னியா பகுதியில் அப்படி அவன் சில கொலைகளை செய்து அது தொடர்பான குறிப்புகளை அனுப்பியுள்ளேன். அதில் அவன் சொல்ல முன் வருவதை அடையாளம் காணுவது கொஞ்சம் சிரமம் என்றாலும் அதை பலர் செய்து காட்டியுள்ளனர். ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1969 இல் the San Francisco Chronicle பத்திரிகைக்கு அவன் அனுப்பியிருந்த சைபர் கோடில் சொல்லியுள்ள செய்தியை அடையாளம் காண முடியாமல் பலரும் தவித்து வந்த நிலையில் தற்போது மூன்று பேர் அடங்கிய குழு அதனை டிகோட் செய்துள்ளனர்.

அதை 340 CIPHER கோட் என சொல்வது வழக்கம். டேவிட் (David Oranchak), ஜார்ல் வேன் (Jarl Van Eycke) மற்றும் சாம் பிளேக் என மூவர் தான் இதை அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 2006 இல் இந்த பணியை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

எந்தவித நிறுத்தற் குறிகளும் பயன்படுத்தப்படாமல் முழுவதும் கேப்பிட்டல் எழுத்துகளாக எழுத்துப்பிழையுடன் அந்த  340 CIPHER கோட் இருந்துள்ளது. அதில் அவன் தெரிவித்துள்ளது…

“என்னை பிடிக்க நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள் என நம்புகிறேன். என்னை விஷ வாயு நிரம்பிய அறைக்குள் அடைப்பது குறித்து நான் துளி அளவு கூட அச்சப்படவில்லை. ஏனென்றால் அப்படி நீங்கள் செய்தால் நான் விரைவாக சொர்க்கத்தை அடைவேன். 

என்னிடம் வேலை செய்ய நிறைய அடிமைகள் உள்ளனர். அவர்கள் எல்லோரும் இறப்புக்கு பின்னர் சொர்க்கத்தில் எதுவும் இல்லை என எண்ணுவதால் மரணத்தை எண்ணி அச்சப்படுகிறார்கள். எனக்கு அப்படியில்லை” என தெரிவித்துள்ளார் சோடியாக் கொலைகாரன். 

“சில தனிப்பட்டவர்களின் முயற்சியினால் சோடியாக் கொலைகாரன் அனுப்பிய CIPHER கோடில் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதை FBI அறியும். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென்பதால் நாங்கள் தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை செய்து வருகிறோம். அதனால் இப்போதைக்கு இது குறித்து எதுவும் சொல்ல முடியாது” என FBI தெரிவித்துள்ளது. 

இருப்பினும் சோடியாக் கொலைகாரனின் CIPHER கோடில் மேலும் இரண்டு கோட்கள் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. சுமார் 37 கொலைகளை அவன் செய்துள்ளதாக சொல்லி இருந்தாலும் மொத்தமாக 7 கொலைகள் மட்டுமே அவன் செய்துள்ளதாக விசாரணை செய்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com