சீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய தைவான் ராணுவம்! மீண்டும் பரபரப்பு.. நடந்தது என்ன?

சீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய தைவான் ராணுவம்! மீண்டும் பரபரப்பு.. நடந்தது என்ன?
சீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய தைவான் ராணுவம்! மீண்டும் பரபரப்பு.. நடந்தது என்ன?

தைவானின் தீவு ஒன்றில் எச்சரிக்கையை மீறி நுழைந்த சீன ட்ரோன்களை தைவான் வீரர்கள் முதன்முதலாக துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டு வீழ்த்தினர்.

ஞாயிறு அன்று (ஆகஸ்ட் 28) மாலை 4 மணியளவில் தைவானின் தாடன் தீவு, எர்டன் தீவு மற்றும் ஷி ஐலெட் ஆகிய மூன்று இடங்களில் சீனாவின் ட்ரோன்கள் பறக்கத் துவங்கின. இதைப் பார்த்ததும் தைவான் ராணுவ வீரர்கள் அவற்றை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கிச் சுடத் துவங்கினர். இதையடுத்து அந்த ட்ரோன்கள் சீனாவின் ஜியாமென் திசையை நோக்கி பறக்கத் துவங்கின.

இந்நிலையில் இன்று தைவானின் ஒரு வெளித் தீவின் மீது சீன ட்ரோன் பறந்த போது முன்பைப் போலவே எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கிச் சுடத் துவங்கினர். ஆனால் எச்சரிக்கையை கவனிக்க தவறியதால் சீன ட்ரோன்கள் மீது தைவான் ராணுவத்தினர் நேரடியாக வெடிமருந்துகளை வீசு அதை சுட்டு வீழ்த்தினர். தாங்கள் எச்சரிக்கை விடுத்த பின்னர் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தைவான் விளக்கம் அளித்துள்ளது. சிக்னல் எரிப்புகளை சுடுதல், ஊடுருவலைப் புகாரளித்தல், ட்ரோனை வெளியேற்றுதல் மற்றும் சுட்டு வீழ்த்துதல் ஆகியவை 4 செயல்முறைகளை தாங்கள் சரியாக கையாண்டுதாகவும் தைவான் தெரிவித்துள்ளது. சீன ட்ரோன் ஒன்றை தைவான் நேரடியாக சுட்டு வீழ்த்துவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com