உலகம்
'கோவாக்சின்' செலுத்தியர்களுக்கான பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தியது பிரிட்டன் அரசு
'கோவாக்சின்' செலுத்தியர்களுக்கான பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தியது பிரிட்டன் அரசு
இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியர்களுக்கான பயணக் கட்டுப்பாட்டை பிரிட்டன் அரசு தளர்த்தியுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி பட்டியலில் சில வாரங்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு சேர்த்து அங்கீகாரம் அளித்தது. இதனையொட்டி கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் பிரிட்டனுக்கு வரலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பயணக் கட்டுப்பாடுகள் இருக்காது என்றும் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இதேபோல் சீனாவின் சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பயணக் கட்டுப்பாடுகளில் இருந்து பிரிட்டன் விலக்கு அளித்துள்ளது.