பருவநிலை அகதிகளாக மாறும் பிரிட்டிஷ் கடலோர மக்கள்: உயரும் கடல்மட்டம்... காலியாகும் வீடுகள்

பருவநிலை அகதிகளாக மாறும் பிரிட்டிஷ் கடலோர மக்கள்: உயரும் கடல்மட்டம்... காலியாகும் வீடுகள்
பருவநிலை அகதிகளாக மாறும் பிரிட்டிஷ் கடலோர மக்கள்: உயரும் கடல்மட்டம்...  காலியாகும் வீடுகள்

பிரிட்டன் கடலோர கிராமங்களின் எதிர்காலம் நிலையற்றதாக மாறியிருக்கிறது. உயரும் கடல்மட்டத்தால் மக்கள் வீடுகளை இழக்கும் பரிதாப நிலை உருவாகியுள்ளது.

கிழக்குக் கடலோர கிராமத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகோலா பேலெஸ் என்பவர் மாலை நேரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மிகப்பெரிய சத்தத்துடன் திடீரென ஒரு குன்று சரிந்து கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடலோர கிராம மக்கள் பலருக்கும் இப்படி பல அனுபவங்கள் நேர்ந்துள்ளன.

இந்த ஹேப்பிஸ்பர்க் என்ற கடலோர கிராமத்தில் கடல் அரிப்பால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் 318 அடி அளவிலான கிராமப்பகுதி கடலுக்குள் மூழ்கிவிடும் என கணிக்கப்படுகிறது. 

நிகோலா பேலெஸ் 

சிறு வீட்டில் வசிக்கும் 44 வயதான செவிலியர் பேலெஸ், ஒவ்வொரு முறை குன்றின் சிறு பகுதி விழும்போதும் அவரது முழு வீடும் ஆட்டம் காண்பதை அவர் உணர்கிறார். நள்ளிரவு நேரங்களில் அப்படி நேரும்போது ஏதோ நிலநடுக்கும் ஏற்பட்டதைப்போல பயப்படுவதாகவும் அவர் விவரிக்கிறார்.

இங்கிலாந்தில் 8,900 இடங்கள் கடலரிப்பு, கடல் மட்ட உயர்வு போன்ற காரணங்களால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மறைந்துபோகலாம் என பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். பிரிட்டன் கடலோர கிராம மக்கள், அடுத்த சில ஆண்டுகளில் வீடுகளை காலிசெய்யும் நிலைமைகூட ஏற்படலாம் என அச்சத்துடன் இருக்கிறார்கள்.

இங்கிலாந்து முழுவதும் 1900 ம் ஆண்டு முதல் 15 செ.மீ அளவுக்கு கடல்மட்டம் உயர்ந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. அது 2100ம் ஆண்டில் 1.12 மீட்டர் அளவுக்கு உயரும் என கணிக்கப்படுகிறது.

"இது வெள்ளம் போன்றதல்ல. கடல் அரிப்பு என்பது நிரந்தரமான மாற்றம். அதை சமாளிப்பது மிகவும் கடினம் " என்கிறார் தென்கிழக்குப் பிராந்திய கடலோர கண்காணிப்புத் திட்ட அதிகாரி சார்லி தாம்சன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com