வங்கி கணக்கில் கூடுதலாக காட்டிய 2.45 பில்லியன் டாலர் - சோகத்தில் முடிந்த இன்ப அதிர்ச்சி!

வங்கி கணக்கில் கூடுதலாக காட்டிய 2.45 பில்லியன் டாலர் - சோகத்தில் முடிந்த இன்ப அதிர்ச்சி!

வங்கி கணக்கில் கூடுதலாக காட்டிய 2.45 பில்லியன் டாலர் - சோகத்தில் முடிந்த இன்ப அதிர்ச்சி!
Published on

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மனநல மருத்துவர் பிளேஸ் அகுயர். இவர் அங்குள்ள பேங்க் ஆப் அமெரிக்காவில் வங்கி கணக்கு ஒன்றை பராமரித்து வருகிறார். 

அண்மையில் அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தின் விவரங்களை அறிந்து கொள்ள நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் வசதியை பயன்படுத்தியுள்ளார். வழக்கம் போல தனது சுய விவரங்கள் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாக்-இன் செய்த மருத்துவர் பிளேஸ் அகுயருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பழைய இருப்பு தொகையை காட்டிலும் கூடுதலாக 2.45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அவரது வங்கி கணக்கில் இருந்தது தான் அவரது  அதிர்ச்சிக்கு காரணம்.

இதுகுறித்து மருத்துவர் பிளேஸ் அகுயர் கூறும்போது ‘முதலில்  அது ஏதேனும் வங்கியின் பரிவர்த்தனையில் ஏற்பட்டிருக்கும் பிழை என்று நினைத்தேன். அதை வங்கி அதிகாரிகளே சரி செய்து விடுவார்கள் என்று இருந்தேன். ஆனால் அது நடக்காததால் நேரடியாக எனது வங்கி மேலாளரை அணுகி விவரத்தை சொன்னேன்’ எனத் தெரிவித்துள்ளார் 

‘அது ஒரு காட்சி பிழை. அதைத் தவிர வேறொன்றுமில்லை. அது சரி செய்யப்பட்டுள்ளது’ என வங்கியின் செய்தித் தொடர்பாளர் பில் ஹால்டின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com