\
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி - ஆஸ்திரேலியா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி - ஆஸ்திரேலியா அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி - ஆஸ்திரேலியா அறிவிப்பு
Published on

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் வரும் 21ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவர் என ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல், காரணமாக ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள பிரதமர் ஸ்காட் மாரிசன், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சுற்றுலா பயணிகளை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். 21ஆம் தேதி முதல் சுற்றுலாத் தலங்கள் முழுமையாக திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: குறிப்பிட்ட தீவு மீது ஏவுகணை சோதனையை தொடரும் வடகொரியா - காரணம் என்ன?

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com