இளம் பெண்ணைக் காப்பாற்றிய ஆப்பிள் கை கடிகாரம்

இளம் பெண்ணைக் காப்பாற்றிய ஆப்பிள் கை கடிகாரம்

இளம் பெண்ணைக் காப்பாற்றிய ஆப்பிள் கை கடிகாரம்
Published on

சாலை விபத்தில் சிக்கிய இளம் பெண், தான் அணிந்திருந்த ஆப்பிள் கை கடிகாரம் அளித்த அவசர தகவலால் உயிருடன் காப்பாற்றப்பட்டார்.

ஜெர்மனியைச் சேர்ந்த கேசி ஆன்டர்சன் (Kacie Anderson)  என்ற இளம்பெண் தனது 9 மாத குழந்தையுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தார். தீடிரென்று தாயும், குழந்தையும் சாலை விபத்தில் சிக்கினார்கள். யாரை உதவிக்கு அழைப்பது என்று தெரியாமல் தவித்த அந்த தாய், அப்போது தான் அணிந்திருந்த ஆப்பிள் கை கடிகாரத்தில், ஆபத்து நேரங்களில் அழைப்பதற்காக இணைக்கப்பட்டிருக்கும் 911 என்ற எண்ணை அழுத்தினார்.

இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனம் தாயையும், சேயையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். பின்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இதனையடுத்து உயிர் தப்பிய இளம் பெண்ணும், குழந்தையும் இப்போது நலமாக இருப்பதாக, மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com