உலகம்
80 ஆயிரம் லைக்ஸ்..24 ஆயிரம் ரீ ட்விட்: ட்விட்டரை கலக்கும் ட்ரம்ப் கார்டூன்ஸ்
80 ஆயிரம் லைக்ஸ்..24 ஆயிரம் ரீ ட்விட்: ட்விட்டரை கலக்கும் ட்ரம்ப் கார்டூன்ஸ்
அமெரிக்க அதிபர் ட்ரம்பை கேலி சித்திரங்களாக சித்தரித்து அதை தன் ட்விட்டர் பக்கத்தில் ஹாலிவுட் நடிகர் வெளியிட்டுள்ளது சலசலப்பை உண்டாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை கேலி செய்யும் சித்திரங்களை ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி தீட்டியுள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்த சித்திரங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகின்றன. அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்பையும் அவரது நிர்வாகத்தையும் கேலி செய்யும் வகையிலான சித்திரங்கள் ஒரே நாளில் 80 ஆயிரத்துக்கும் மேலானோர் வரவேற்றுள்ளனர். சுமார் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை மறுபதிவு செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக கேரி தமது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பிரபலங்களைக் கேலி செய்யும் வகையில் சித்திரங்களைத் தீட்டி வருவது குறிப்பிடத்தக்கது.