\
மகனுக்கு நம்பிக்கை கொடுப்பதற்காக 30 மணி நேரம்  பச்சைக் குத்திக்கொண்ட பாசக்கார தந்தை!

மகனுக்கு நம்பிக்கை கொடுப்பதற்காக 30 மணி நேரம் பச்சைக் குத்திக்கொண்ட பாசக்கார தந்தை!

மகனுக்கு நம்பிக்கை கொடுப்பதற்காக 30 மணி நேரம் பச்சைக் குத்திக்கொண்ட பாசக்கார தந்தை!
Published on

கனடா நாட்டின் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்தவர் டெரெக் ப்ரூ சீனியர். அவர் தனது எட்டு வயது மகனின் மார்பு பகுதியில் இருக்கும் பிறப்பு அடையாளத்தை போலவே அச்சு அசலாக தானும் அதே இடத்தில் பச்சை (டேட்டூ) குத்திக்கொண்டுள்ளார். 

“என் மகன் பிறக்கும் போதே அவனது மார்பு பகுதியில் வட்ட வடிவில் மிகப்பெரிய அடையாளம் ஒன்று இருந்தது. எட்டு வயதாகும் அவன் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கூட மேல் சட்டை அணிந்த படி குளிப்பதை கவனித்தேன். அது எனக்கு பெருத்த வேதனையை கொடுத்தது. அதனால் அவனுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் நானும் அவனுக்கு இருப்பது போல அதே இடத்தில் பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தேன். அதன்படி இப்போது பச்சையும் குத்திக் கொண்டுள்ளேன்.

முதலில் சீக்கிரம் இந்த வேலை முடிந்து விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் பச்சை குத்திக் கொள்ள சுமார் 30 மணி நேரம் ஆகிவிட்டது. வலி இருந்தாலும் எனது மகனுக்காக என்பதால் இந்த வலி சுகமான அனுபவமாக இருக்கிறது” என்கிறார் அந்த பாசக்கார தந்தை. 

“அப்பா இதை செய்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்கிறார் டெரெக் ப்ரூ ஜுனியர். பச்சை குத்திக்கொண்டதை மகனிடம் தெரிவிக்க நீச்சல் குலத்திற்கு அவனை அழைத்து சென்று அதனை வெளிப்படுத்தியுள்ளார் டெரெக் ப்ரூ சீனியர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com