\
'பேட் மேன்' கதாபாத்திரத்துக்கு வயது 80 - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 

'பேட் மேன்' கதாபாத்திரத்துக்கு வயது 80 - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 

'பேட் மேன்' கதாபாத்திரத்துக்கு வயது 80 - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 
Published on

பேட் மேன் கதாபாத்திரம் உருவாகி 80 ஆண்டுகள் ஆனதை அமெரிக்க, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். 

1939ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் வெளியான காமிக் புத்தகத்தின் கதாபாத்திரம் பேட்மேன். மக்களை காக்கும் ரட்சகன் என்ற துணைப் பெயருடன் வலம் வந்த பேட்மேன், அவதரித்து 80 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பல நாடுகளில் பேட்மேன் ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். 

சிறுவர் முதல் பெரியோர் வரை பேட்மேன் போல் வேடமணிந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர். 80ஆவது ஆண்டு நினைவாக ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓட்டப்பந்தயமும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் பேட் மேன் ஆடை அணிந்து ஓடி உற்சாகமடைந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com