சிங்கப்பூரின் அதிபராகப் பதவியேற்றார் தமிழ் வம்சாவளி தர்மன் சண்முகரத்னம்!

சிங்கப்பூரின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்றார்.
தர்மன் சண்முகரத்னம்
தர்மன் சண்முகரத்னம்twitter

சிங்கப்பூரில் கடந்த 1-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து இன்று சிங்கப்பூரின் அதிபராகப் பதவியேற்றார்.

யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரில் ’நோயியலின் தந்தை’ என்று அழைக்கப்படும் மருத்துவ விஞ்ஞானி கே.சண்முகரத்தினத்தின் மகன் ஆவார். சிங்கப்பூரில் பிப்ரவரி 25, 1957 இல் பிறந்த தர்மன், லண்டன் கூல் ஆப் எக்னாமிஸில் இளங்கலை பொருளாதார பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வொல்ப்சன் கல்லூரியில் முதுகலை பொருளாதார் (தத்துவம்) பட்டமும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் (MPA) பெற்றவர் ஆவார்.

ஆளும் மக்கள் செயல் கட்சியில் (PAP) சேர்ந்து, 2001ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னம், 2001 முதல் 2019 வரை துணை பிரதமராகப் பதவி வகித்தார்.

பின்னர் 2019 முதல் 2023 வரை மூத்த அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2023 வரை சிங்கப்பூரின் நாணய ஆணையத்தின் தலைவராக இருந்துள்ளார். 2019 முதல் 2023 வரை சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு கழகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், தர்மன் சண்முகரத்னம் 2001ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டுவரை தொடர்ந்து ஜூரோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துவந்துள்ளார்.

சிறுவயதில் விளையாட்டு வீரர்!

தனது இளமைப் பருவத்தில் தர்மன் சண்முகரத்னம் ஒரு சுறுசுறுப்பான விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். தவிர, ஒரு சிறந்த கவிஞரும் ஆவார். 1970களில் இங்கிலாந்தில் படித்தபோது மாணவர் செயற்பாட்டாளரான தர்மன், முதலில் சோசலிச நம்பிக்கைகளைக் கொண்டிருந்தார். பொருளாதாரம் குறித்த அவரது கருத்து்கள், பின்னர் பணியின்போது உருவாகின. அதைத் தொடர்ந்து தனது பணி வாழ்க்கையை பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பொதுச் சேவையில் செலவிட்டார். அவர் பல்வேறு உயர்மட்ட சர்வதேச கவுன்சில்கள் மற்றும் பேனல்களுக்கு தலைமையும் தாங்கியுள்ளார்.

வழக்கறிஞரை மணந்த தர்மன் சண்முகரத்னம்!

சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யூமிகோ இட்டோகி என்பவரை தர்மன் சண்முகரத்னம் திருணம் செய்துகொண்டார். அவர் சிங்கப்பூரில் சமூக நிறுவனங்களிலும் லாப நோக்கற்ற கலைத் துறையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.

இதற்குமுன்பு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதனு, செங்கரா வீட்டில் தேவன் நாயர் என்று அழைக்கப்படும் மலையாள வம்சாவளியைச் சேர்ந்த தேவன் நாயர் என்பாரும் சிங்கப்பூரின் அதிபர்களாகப் பணியாற்றி உள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com