வாஷிங்டனில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

வாஷிங்டனில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

வாஷிங்டனில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
Published on

போர்ச்சுக்கல் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்றடைந்தார். 

இன்று காலை வாஷிங்டன் விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டிருந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களை சந்தித்து மோடி கைக்குலுக்கினார். அந்த நாட்டு தொழிலதிபர்கள், பெரு நிறுவன அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். நாளை டிரம்ப்பை சந்தித்து பேசும் மோடி, அதிபர் மாளிகையில் நடைபெறும் இரவு விருந்திலும் பங்கேற்கிறார். டெனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அதிபர் மாளிகை இரவு விருந்துக்கு அழைக்கப்படும் முதல் உலகத் தலைவர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. 
மோடியின் வருகை குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடியை வரவேற்பதாகக் கூறியுள்ளார். முக்கியமான விஷயங்கள் குறித்து உண்மையான நண்பருடன் ஆலோசிக்க இருப்பதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com