தாய்லாந்து : நத்தையில் புதைந்திருந்த அரிய முத்து மணியால் கோடீஸ்வரரான பெண்!

தாய்லாந்து : நத்தையில் புதைந்திருந்த அரிய முத்து மணியால் கோடீஸ்வரரான பெண்!

தாய்லாந்து : நத்தையில் புதைந்திருந்த அரிய முத்து மணியால் கோடீஸ்வரரான பெண்!
Published on

தாய்லாந்து நாட்டில் உள்ள SATUN மாகாணத்தை சேர்ந்தவர் கொட்சகோர்ன் தந்திவாவட்குல் என்ற பெண் கடந்த ஜனவரி மாத இறுதியில் வீட்டில் சமைப்பதற்காக உள்ளூர் சந்தையிலிருந்து நத்தை வாங்கி வந்துள்ளார். சுமார் 163 ரூபாய்க்கு அதனை அவர் வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்ததும் அதனை சுத்தப்படுத்தியுள்ளார். அப்போது ஒரு நத்தையில் மஞ்சள் நிற கல் போன்ற அரிதான ஒன்றை கவனித்துள்ளார். பின்னர் அதை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் காட்டியதும் ‘அரிய மஞ்சள் நிற முத்து என்றும், அதன் விலை பல மடந்தும் என்றும்’ அறிந்து கொண்டுள்ளார். அந்த முத்து இப்போது அவரை கோடீஸ்வரராக்கி உள்ளது. 

“நான் அந்த கல்லை அம்மாவிடம் காட்டியதும். அம்மா எனக்கு அது முத்து என சொன்னார். இந்த தகவல் வெளியில் கசிந்தால் எனக்கு நத்தையை விற்பனை செய்த வியாபாரி தகராறு செய்வார் என அஞ்சி இந்த விஷயத்தில் ரகசியம் காயத்தேன். அதே சமயத்தில் இந்த மஞ்சள் நிற முத்துக்கு உள்ள மவுசு குறித்து மீனவர் ஒருவர் கோடீஸ்வரரான செய்தி மூலம் அறிந்து கொண்டேன்” என கொட்சகோர்ன் தந்திவாவட்குல் தெரிவித்துள்ளார். 

சுமா 1.5 சென்டி மீட்டர் விட்டம் கொண்ட இந்த முத்து மணியை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு தனது தாயின் மருத்துவ செலவுகளை கவனிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com