சூரிய ஒளியில் சமைக்கப்படும் சூப்பர் சிக்கன்

சூரிய ஒளியில் சமைக்கப்படும் சூப்பர் சிக்கன்

சூரிய ஒளியில் சமைக்கப்படும் சூப்பர் சிக்கன்
Published on

தாய்லாந்து நாட்டில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி கோழி இறைச்சியை மிக சுவையாக சமைக்கிறார் சிலா சுதாரத் என்ற சமையல் கலைஞர். இதை அந்த நாட்டில் உள்ள பலரும் விரும்பி உண்ணுகின்றனர்.

தாய்லாந்தைச் சேர்ந்த சிலா சுதாரத் சூரிய வெப்பத்தில் சிக்கன் சமைக்கிறார். ஆயிரம் சிறிய கண்ணாடிகளை உலோகக் கம்பிகளில் இணைத்து, அதன் மூலம் சூரிய சக்தியை இறைச்சி மீது குவித்து, வேக வைக்கிறார். “1997 ஆம் ஆண்டு பேருந்து கண்ணாடி மூலம் சூரிய வெப்பம் என்னை சுருக்கென்று தாக்கியது. அப்போதுதான் இந்த வெப்பத்தில் ஏன் இறைச்சியை சமைக்கக் கூடாது என்று யோசித்தேன். ஆனால் எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். விரைவில் என் முயற்சியில் வெற்றி பெற்றேன். கண்ணாடிகளின் மூலம் சூரிய வெப்பத்தைக் குவித்து, 10 முதல் 15 நிமிடங்களில் ஒன்றரை கிலோ இறைச்சியை வேக வைத்துவிடுவேன். 300 டிகிரி செல்சியஸ் இயற்கை வெப்பம் கிடைக்கிறது. இறைச்சியை இதைவிட வேகமாக வேறு எப்படியும் சமைத்துவிட முடியாது. சுவையும் அருமையாக இருக்கும். சூரிய ஒளியில் சமைக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவதற்காகவே தொலைதூரத்திலிருந்தும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்” என்கிறார் சிலா சுராத்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com