கம்போடியாவுக்கு தப்பியோடிய தாய்லாந்தின் முதல் குரங்கு அம்மை நோயாளி

கம்போடியாவுக்கு தப்பியோடிய தாய்லாந்தின் முதல் குரங்கு அம்மை நோயாளி
கம்போடியாவுக்கு தப்பியோடிய தாய்லாந்தின் முதல் குரங்கு அம்மை நோயாளி

தாய்லாந்தின் முதல் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட நைஜீரியர் ஒருவர் சனிக்கிழமை கம்போடியாவின் புனோம் பென்னில் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கம்போடிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

27 வயதான நைஜீரிய நபர் ஒருவர் தாய்லாந்து சென்றுவிட்டு விசா முடிந்தபிறகும் ரெசார்ட் நகரமான புகத்திலேயே தங்கியிருக்கிறார். அப்போது அவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புக்கத்தில் தங்கியிருந்தபோது அவர் இரண்டு கேளிக்கை விடுதிகளுக்கு சென்றதால் அங்கு சென்ற கிட்டத்தட்ட்ட 142 பேரை கண்டறிந்து அவர்களுக்கும் வைரஸ் தொற்று இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த நபர் பாதுகாப்பற்ற முறையில் ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை தொற்று உறுதியானதையடுத்து அந்த நபர் புக்கத்திலிருந்து தப்பியோடியது மட்டுமல்லாமல், தனது செல்போனையும் ஆஃப் செய்துவைத்துவிட்டதாகவும், சுகாதாரத்துறையின் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்காமலும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தாய்லாந்து முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், அவரது செல்போன் எண் கம்போடியாவின் வடகிழக்கு மாகாணத்தில் ஆன் செய்யப்பட்டிருந்ததை சிக்னல்கள் மூலம் கண்டறிந்தனர்.

இதனையடுத்து சனிக்கிழமை கம்போடிய காவல்துறை பல இடங்களில் தேடியதில், பெனோம் பென் விருந்தினர் மாளிகையில் அந்த நபரைக் கண்டறிந்துள்ளனர். பிறகு அவரை மருத்துவ சிகிச்சைக்காக கெமர்-சோவியத் ஃப்ரென்ட்ஷிப் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட நைஜீரிய நபருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர் கம்போடியா சுகாதாரத்துறை. கொரோனா வைரஸ் போல் குரங்கு அம்மை வைரஸ் தொற்றை ஏற்படுத்தாது என்கிறது உலக சுகாதாரத்துறை. இருப்பினும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் பரவத்தொடங்கிய குரங்கு அம்மை தற்போது, 74 நாடுகளில் 16,800க்கும் அதிகமானோரை பாதித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com