ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை
Published on

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட்டுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட்டு. இவரது ஆட்சியின் போது கிராமப்புற விவசாயிகளுக்கு அரிசி கொள்முதல் விலையில் மானியம் அளித்ததில் ஊழல் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தாய்லாந்து உச்சநீதிமன்றம், இங்கலக் சின்னவாட்டு அரசி மானியத் திட்டத்தில் முறைகேடு செய்து அரசுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இழப்பு ஏற்படுத்தியதாக உறுதி செய்துள்ளது. 
இந்த குற்றத்திற்காக அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே இங்லக் நாட்டை விட்டு தப்பி சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த 2014ஆம் இங்லக் சின்னவாட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதும், அரசியலில் ஈடுபட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com