தாய்லாந்தில் ஓராண்டு துக்கம் முடிந்தது: வண்ண உடைக்கு மாறிய பொதுமக்கள்
தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் உடல் தகனம் செய்யப்பட்டதை அடுத்து, ஓராண்டாக அனுசரிக்கப்பட்டு வந்த துக்கம் முடிவுக்கு வந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் மன்னராக போற்றப்பட்ட பூமிபால் அதுல்யதேஜ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். இதைத் தொடர்ந்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தாய்லாந்து மக்கள் வண்ண உடைகள் அணிவதை தவிர்த்து, கடந்த ஓராண்டாக கருப்பு உடைகளை மட்டுமே அணிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பூமிபாலின் உடல் தகனம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஓராண்டு துக்கம் முடிவுக்கு வந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் மீண்டும் வண்ண உடைகளுக்கு மாறியுள்ளனர். அதே சமயம் வண்ண உடைக்கு மாறியதால் மன்னர் இறந்த துக்கத்தில் இருந்து மீண்டுவிட்டோம் என கூறிவிட முடியாது என்றும், மன்னரின் மறைவால் தொடர்ந்து வாடி வருவதாகவும் பாங்காக் நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.