தாய்லாந்து பிரதமர் தேர்தலில்‌ களம் இறங்கும் திருநங்கை!

தாய்லாந்து பிரதமர் தேர்தலில்‌ களம் இறங்கும் திருநங்கை!

தாய்லாந்து பிரதமர் தேர்தலில்‌ களம் இறங்கும் திருநங்கை!
Published on

தாய்லாந்து பிரதமர் தேர்தலில் முதல்முறையாக திருநங்கை வேட்பாளர் ஒருவர் களமிறங்கி உள்ளார்.‌

தாய்லாந்தில் அடுத்த மாதம் 24-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலுக்காக அந்நாட்டின் முக்கிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி‌ சார்பில் பவுலின் காம்ப்ரிங் என்ற திருநங்கை போட்டியிடவுள்ளார். 

தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராகவும், முதல் திருநங்கை வேட்பாளராகவும் களமிறங்கி இருக்கும் பவுலின் காம்ப்ரிங்குக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தலுக்காக தற்போது பவுலின் காம்ப்ரிங் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

பினித் காம்ப்ரிங் என்ற பெயரில் ஆணாக இருந்த பவுலின் காம்ப்ரிங் 2 குழந்தைகளுக்கு தந்தையாவார். அவர் பத்திரிகையாளராகவும், தொழிலதிபராகவும் இருந்தார். 3 வருடங்களுக்கு முன் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர், தனது பெயரையும் பவுலின் என மாற்றிக்கொண்டார்.

தேர்தல் குறித்து பேசிய பவுலின் காம்ப்ரிங், ''நீங்கள் ஒரு திருநங்கையா என்று மக்கள் என்னை பார்த்து ஆச்சரியமடைகின்றனர். நீங்கள் பிரதமராக ஆக வேண்டுமே என்றும் கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் கேள்விகளில் கிண்டல் இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது.

முதலில் நீங்கள் உங்களை காதலிக்க வேண்டும்.அந்த அன்பை மற்றவர்களிடத்திலும் பகிர வேண்டும். நான் பிரதமராக ஆவேனா இல்லையா என்பது முக்கியம் இல்லை. இதற்கு சிறிதுகாலம் எடுக்கலாம். திருநங்கைகள் அரசியலில் ஜொலிப்பார்கள். நிச்சயம் பிரதமராகவும் ஆவார்கள். நான் ஆகாவிட்டாலும் எதிர்காலத்தில் இது நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com