அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் சுட்டுக்கொலை
Published on

அமெரிக்காவில் பள்ளிச்சிறுவன் சரமாரியாக சுட்டதில் 9 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்தனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சாண்டா ஃபே நகரில் உள்ள பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த மாணவன் கண்மூடித்தனமாக நாலாபுறமும் சுட்டான். இதில் குண்டு பாய்ந்து 9 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். இது தவிர 10 மாணவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெறித்தனமாக சுட்ட டிமிட்ரியோஸ் பகோர்ட்டிஸ் என்ற மாணவனை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் பள்ளியில் நடக்கும் 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 22 துப்பாக்கிச் சூடுகள் பள்ளிகளில் நடைபெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com