கடுமையான சரிவை சந்தித்து வரும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு - காரணம் இதுதான்!

கடுமையான சரிவை சந்தித்து வரும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு - காரணம் இதுதான்!

கடுமையான சரிவை சந்தித்து வரும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு - காரணம் இதுதான்!
Published on

உலகின் நெம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். கடந்த சில வாரங்களாகவே அவரது சொத்து மதிப்பு சரிந்து வருகிறது. அதன் காரணமாக நெம்பர் ஒன் இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு மஸ்க் தள்ளப்பட்டுள்ளார். டெஸ்லாவின் பங்குகளில் ஏற்பட்டுள்ள சரிவே இதற்கு முதல் காரணமாக சொல்லப்படுகிறது. 

கடந்த ஜனவரி 10 அன்று சுமார் 209 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர் மஸ்க். தற்போது அவரது சொத்து மதிப்பு 136 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. ஆனால் இரண்டே மாதங்களில் நிலை தலைகீழாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 60 பில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்களை மஸ்க் இந்த 60 நாட்களில் இழந்துள்ளார். 

முதலீட்டாளர்களை டெஸ்லா நிறுவனம் இழுக்க தவறியது மஸ்கின் இந்த சரிவுக்கு காரணம். இந்த இக்கட்டான சூழ்நிலையை அவர் கடந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் எனவும் சில பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com