ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெயர் திடீர் மாற்றம் 

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெயர் திடீர் மாற்றம் 
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெயர் திடீர் மாற்றம் 

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு ஜெய்ஷ்-இ-முகமது. இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தலைவர் மசூத் அசாரும் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளனர். எனவே இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க ஜெய்ஷ்-இ-அமைப்பின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இந்த அமைப்பின் பெயர் (Majlis Wurasa-e-Shuhuda Jammu wa Kashmir) மஜ்லீஸ் உரசா-இ- ஷூஹூதா ஜம்மு வா காஷ்மீர் என்ற பெயரில் செயல்பட உள்ளது. இந்த அமைப்பிற்கு மசூத் அசாரின் சகோதரரான (Mufti Abdul Rauf Asghar) முஃப்தி அப்துல் ராஃப் அஸ்கர் தலைவராக செயல்பட உள்ளார். மசூத் அசார் தற்போது உடல்நல குறைவால் அவதிபட்டு வருகிறார். 

அத்துடன் இந்தப் புதிய அமைப்பு இந்தியாவில் 30 தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அவை ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள ராணுவ குடியிருப்பு மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளின் வாகனம் ஆகியவை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு குதம்-உல்-இஸ்லாம் மற்றும் அல் ரெஹ்மத் என்ற பெயர்களில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com