நிலநடுக்கம்
நிலநடுக்கம்கூகுள்

நேபாள எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: 95 பேர் உயிரிழப்பு; இந்தியாவிலும் உணரப்பட்ட நிலநடுக்கம்

எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 95 பேர் பலியான தகவலை அடுத்து இந்தியாவில் நில அதிர்வு உணர்ந்ததாக நிலநடுக்க தேசிய மையம் கூறியுள்ளது.
Published on

எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 95 பேர் பலியானதகவலை அடுத்து இந்தியாவில் நில அதிர்வு உணர்ந்ததாக நிலநடுக்க தேசிய மையம் கூறியுள்ளது.

இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் நேபாள எல்லைக்கு அருகே உள்ள திபெத் எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் சக்திவாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 95 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது என்று நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் கூறியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதியப்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளிவந்ததை அடுத்து. இந்த இறப்பு எண்ணிக்கையானது அதிகரித்து தற்பொழுது 95 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்க அதிர்வானது பீகார், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது என்று கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தின் மையம்:

திபெத் தலைநகர் லாசாவிலிருந்து தென்மேற்கே 400 கி.மீ தொலைவில் உள்ள ஷிகாட்சே நகரில் உள்ள டிங்ரி மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்வோருக்கு டிங்ரி ஒரு சுற்றுலா மையமாகும்.

அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்கள்

நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) கூற்றுப்படி முதல் நிலநடுக்கம் காலை 6:35 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டாவது நிலநடுக்கம்10 கிமீ ஆழத்தில், 4.7 ரிக்டர் அளவிலேயும், மூன்றாவது நிலநடுக்கம் 30 கி.மீ ஆழத்தில் சுமார் 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இப்பகுதியில் முன்னதாக வந்த நிலநடுக்கம்

நேபாளம் புவியியல் ரீதியாக அடிக்கடி பூகம்பக் தாக்கும் பகுதியாக அமைந்துள்ளது. முன்னதாக் 2015 ஆம் ஆண்டில், நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 9,000 பேர் இறந்தனர் மற்றும் 22,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர், அரை மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாயின என்பது நினைவிருக்கலாம்.

இந்தியாவில் தாக்கம்

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது பீகார் வரை உணரப்பட்டுள்ளது. இருப்பினும் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com