தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
தெலங்கானாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் யட்டாரி மாவட்டத்தில் உள்ள ரஹீம்கான்பேட் பகுதியைச் சேர்ந்தவர் கோவர்தன் ரெட்டி. (வயது 50). இவருக்கு ஷோப னா ராணி என்ற மனைவியும் ஸ்ரேயா (15), துளசி (12) என்ற மகள்களும் உள்ளனர். குடும்பம் ஐதராபாத்தில் வசிக்க, கோவர்ந்தன், கடந்த 8 வரு டத்துக்கு முன் வேலைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சகொலா நகரின் டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்றில் காசாளராகப் பணியாற்றினார்.
இந்நிலையில் இவர் பணியாற்றும் கடைக்கு நேற்று வந்த கொள்ளையர்கள் அங்கு துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுவிட்டு பணத்தைக் கொள் ளையடித்துச் சென்றனர். இதில், கோவர்தன் சம்பவ இடத்திலேயே, குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியானார். அவருடன் பணியாற்றிய மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார்.
இதை உறுதிப்படுத்திய கோவர்தனின் உறவினர் மதுசூதன் ரெட்டி, இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில் நடந்தது என் றும் உடலை இந்தியா கொண்டு வர தெலங்கானா அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.