Tehreek e Taliban Pakistan claiming to capture pakistani checkpost near afghanistan border
தாலிபன் அமைப்புஎக்ஸ் தளம்

பாகிஸ்தான் சோதனைச் சாவடியை கைப்பற்றி கொடியை ஏற்றிய தாலிபன் அமைப்பு!

கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பஜாயுர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனைச் சாவடியை கைப்பற்றியதாக தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
Published on

2021ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்திற்கு இடையே எல்லைப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் அதன் மேற்கு எல்லைப் பகுதிகளில் மீண்டும் தீவிரவாத வன்முறையுடன் போராடி வருகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் நான்கு இடங்களில் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 46 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டனர். இன்னொரு குடும்பத்தில் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் 7 கிராமங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தலிபான் அரசாங்க துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிட்ராத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பஜாயுர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனைச் சாவடியை கைப்பற்றியதாக தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும். அந்த இடத்தில் தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tehreek e Taliban Pakistan claiming to capture pakistani checkpost near afghanistan border
ஆப்கன் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் வான்வழித் தாக்குதல்.. 46 பேர் பலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com