\
iran
iranreuters

ஈரான் முடிவால் அமெரிக்கா குஷி! முடிவுக்கு வரும் நீண்ட போர்! வேறு நாடுக்கு செல்லும் யுரேனியம்!

ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 
Summary

அணு ஆயுத சோதனைகளுக்கான யுரேனியத்தை மூன்றாவது நாட்டுக்கு அனுப்ப ஈரான் முடிவு செய்தது, அமெரிக்கா-ஈரான் இடையேயான நீண்ட போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. பொருளாதார தடைகளை தளர்த்த அமெரிக்கா ஒப்புக்கொண்டதால், உலக அமைதிக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

அனு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, கடந்த பிப்ரவரி மாதம் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான், அன்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களையும் குறி வைத்து தாக்கியது. இதனால், உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு உலக நாடுகள், தங்களால் முடிந்து முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

இப்படியான சூழ்நிலையில், ஈரான் எடுத்த அதிரடி முடிவு ஒன்றால், அமெரிக்கா மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அனு ஆயுத தயாரிப்புக்கும், அனு ஆலைகள் இயங்குவதற்கும் தேவையான முக்கியமான எரிபொருள் தான் யுரேனியம். இந்த யுரேனியம் இருந்தால் தான், அனு ஆயுத சோதனை சாத்தியம் ஆகும். இந்நிலையில், தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை, பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட மூன்றாவது நாட்டிடம் கொடுப்பதற்கு, ஈரான் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

donald trump
donald trumpreuters

மேலும், ஈரான், அமெரிக்கா இடையே ஒரு ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அது ஏற்பட்ட 7 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு கைமாறாக, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள், முற்றுகைகள், பொருளாதார கட்டுப்பாடுகளை தளர்த்த, அமெரிக்க ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அமைதி பேச்சுவார்த்தை, கத்தாரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய சீனா உத்தரவாத நாடாக செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள செயல்பாடுகளில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது விதிமீறல் ஏற்பட்டாலோ, அதனை சரி செய்வதற்காகவும், மீண்டும் ராணுவ மோதல்கள் வெடிக்காமல் இருப்பதற்காகவும், மத்தியஸ்த நாடுகள் அடங்கிய ஒரு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. அனு ஆயுத தயாரிப்பு காரணமாக தொடங்கப்பட்ட இந்த போர், யுரேனியத்தை வேறு நாட்டுக்கு அனுப்புவதாக ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம் முடிவுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

iran
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்.. ட்ரம்ப் பின்னடைவைச் சந்தித்தால்.. ஈரான் மீது கடும் தாக்குதல்?