''என்னால் பேச முடியவில்லை; மனசு கனமாக இருக்கிறது'' - உக்ரைனியர்கள் கண்ணீர்
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து இதுவரை 25 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. உறவுகள், உடைமைகளை இழந்து கண்ணீருடன் அண்டை நாடுகளின் வாசல்களின் காத்திருக்கின்றனர், உக்ரைனியர்கள்.
''கண்ணீர் சிந்தாமல் என்னால் பேச முடியவில்லை. நாட்டை நினைத்து மிகவும் கவலைப்படுகிறேன். இது ஒரு மோசமான விஷயம், யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. கார்கிவ், மைகோலைவ் உள்ளிட்ட நகரங்களை தாக்கி விட்டனர். அங்கிருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் தான் என் சொந்த ஊர் உள்ளது. மனம் கனமாக இருக்கிறது. அனைவரும் புகலிடம் தேடி இங்கு வந்துள்ளனர். அமெரிக்காவிடம் பாதுகாப்பு கோருவதற்கும், புகலிடம் கேட்பதற்கும் அனைவருக்கும் உரிமையுண்டு. அதனால் தான் தங்களாலான முயற்சியை செய்து வருகிறோம்'' என்கிறார் அங்கு சிக்கி தவிக்கும் ஒருவர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியதில் இருந்து, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். நடக்க முடியா முதியவர்கள் முதல் நடை பயிலா குழந்தைகள் வரை, உயிர் பிழைக்க சொந்த மண்ணை விட்டு அயலகம் செல்கின்றனர். ரஷ்யாவுடன் போரிட்டு மண்ணை காக்கும் முனைப்பில் உள்ள உக்ரைன் வீரர்கள், நாட்டை விட்டு வெளியேற விரும்பும் பொதுமக்களுக்கும் உதவிக்கரம் நீட்டுகின்றனர். உக்ரைனில் இருந்து வெளியேறினாலும் நாட்டின் நிலையை நினைத்து, உக்ரைன் மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.
"கண்ணீர் சிந்தாமல் என்னால் பேச முடியவில்லை. நாட்டை நினைத்து மிகவும் கவலைப்படுகிறேன். இது ஒரு மோசமான விஷயம், யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. கார்கிவ், மைகோலைவ் உள்ளிட்ட நகரங்களை தாக்கி விட்டனர். அங்கிருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் தான் என் சொந்த ஊர் உள்ளது. மனம் கனமாக இருக்கிறது" என்கிறார் உக்ரைனை சேர்ந்த ஒருவர்.
ஆரம்பத்தில் உக்ரைனியர்களை வரவேற்ற அண்டை நாட்டினர் தற்போது கதவுகளை மெல்ல மூட தொடங்கி விட்டனர். குறிப்பாக ருமேனியா, மால்டோவா, போலந்து உள்ளிட்ட நாடுகள் ஏதிலிகளை தாங்கும் திறனில்லை என்று கையை விரித்து விட்டனர். மால்டோவாவில் இருக்கும் 2 ஆயிரத்து 500 ஏதிலிகளை ஏந்தி கொள்ள ஜெர்மன் அரசு தற்போது முன்வந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கதவுகளையும் தட்ட தொடங்கி உள்ளனர் உக்ரைனியர்கள்
அனைவரும் புகலிடம் தேடி இங்கு வந்துள்ளனர். அமெரிக்காவிடம் பாதுகாப்பு கோருவதற்கும், புகலிடம் கேட்பதற்கும் அனைவருக்கும் உரிமையுண்டு. அதனால் தான் தங்களாலான முயற்சியை செய்து வருகிறோம்.
அண்டை நாட்டு அரசுகள் உதவுவதில் சுணக்கம் காட்டினாலும், தன்னார்வலர்கள் தங்களாலான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக போலாந்து எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தன்னார்வலர்களின் முகாமில், குழந்தைகள் விளையாடுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்ச்சூழலை மறந்து மழலைகள் பொம்மைகளோடு அங்கு விளையாடி வருகின்றனர். இதே போன்று எல்லையில் காத்திருக்கும் குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் லாலிபாப் வழங்கி சிரிக்க வைக்கின்றனர்.
உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலும் நாட்டை விட்டு வெளியேற மனமின்றி உக்ரைனிலேயே பலர் உள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவுகளை உள்நாட்டு தன்னார்வலர்கள் பேருந்துகள் மூலம் எடுத்துச் சென்று வழங்கி வருகின்றனர்.