நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அமெரிக்க வாழ் தமிழர்கள் மனு அளித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹுஸ்டன் நகருக்குச் சென்றுள்ள மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனுவை தமிழர்கள் அளித்தனர். ஹைட்ரோகார்பன் திட்டம் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என அமைச்சர் தங்களிடம் வாதிட்டதாகவும் ஹுஸ்டன் நகரில் இருந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பு வரும் என, தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்ததாக மனு அளித்த தமிழர்கள் தெரிவித்தனர். இவ்விவகாரத்தில் இயன்றதை செய்வதாக அமைச்சர் உறுதியளித்ததாகவும் மனு அளித்தவர்கள் கூறினர்.