உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப ஏற்பாடு - உதவி எண்கள் அறிவிப்பு

உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப ஏற்பாடு - உதவி எண்கள் அறிவிப்பு
உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப ஏற்பாடு - உதவி எண்கள் அறிவிப்பு

உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது

உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப விரும்பினால், 044-28515288 / 96000 23645 / 99402 56444 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், மேலும் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவிகள் கோரலாம் என்றும் தமிழக அரசின் அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது

உக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் விவகாரத்தில் உதவுவதற்கு தயாராக உள்ளதாக ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது

அச்சுறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்து இன்று காலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதனைத் தொடர்ந்து உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது ரஷ்ய ராணுவம். இதன்காரணமாக பல நகரங்களில்  குண்டுகள் வீசப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உக்ரைன் போர் சூழலில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு இந்தியத் தூதரகம் வழியாக விரைந்து உதவிடும்படி மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். எனவே உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் தொடர்பு கொள்க : mm.abdulla@sansad.nic.in</p>&mdash; Pudukkottai M.M.Abdulla (@pudugaiabdulla) <a href="https://twitter.com/pudugaiabdulla/status/1496702281147838473?ref_src=twsrc%5Etfw">February 24, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தன்னாட்சி பிராந்தியங்களாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ள அதிபர் புதின், அந்த 2 பிராந்தியங்களில் மட்டும் ரஷ்யப்படைகள் அமைதி காக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உக்ரைனுக்குள் நுழைய ரஷ்யப்படைகளுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியை புதின் வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக,உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் பகுதிகளில் 30 நாட்களுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com