\
இடதுபுறம்: மாலுமி நவீன்
இடதுபுறம்: மாலுமி நவீன்Reuters

மகனைக் காணாமல் தவிக்கும் பெற்றோர்.. தமிழக மாலுமிக்கு ஆனது என்ன? நெஞ்சை உருக்கும் பாசப் போராட்டம்!

பதற்றம் நிறைந்த ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் காணாமல் போன தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது மாலுமியை மீட்டுத் தர வேண்டுமென அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
Published on: 

ஈரானில் நிலவும் பதற்றமான சூழலால் தனது மகனைப் பற்றிய தகவல் தெரியாமல் தவித்து வருகிறது திண்டுக்கலைச் சேர்ந்த ஒரு குடும்பம். மெரைன் படிப்பை முடித்துவிட்டு மாலுமியாக பணியாற்றச் சென்ற தங்களின் 23 வயது மகனைக் காணவில்லை என்ற பெற்றோரின் கலக்கமான குரல், திண்டுக்கல்லில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் பணிக்குச் செல்வதற்காக 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மகனை அனுப்பிவைத்த பெற்றோர், கடன் சுமையில் தவிப்பதோடு, மகன் எப்போது திரும்புவான் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். துபாயில் உள்ள நிறுவனத்தில் ஆறு மாத கால ஒப்பந்தத்திற்கு பணியாற்றச் சென்ற நவீன் குமார், வெளிநாடு சென்ற ஒரு வாரத்திலேயே ஈரானில் கப்பலில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

மாலுமி நவீனின் தாய் பாண்டி செல்வி
மாலுமி நவீனின் தாய் பாண்டி செல்விReuters

ஆனால், அப்போது மோதல் தொடங்கவில்லை. இருப்பினும் பதற்றம் நிலவிய அந்த சமயத்திலேயே நவீனின் பெற்றோர் அவரை தாயகம் அழைத்துவர கடுமையான முயற்சிகளை செய்தும் எந்த பயனும் இல்லை. மகன் இன்னும் நவீன் அந்த கப்பலில்தான் இருக்கிறானா?... இல்லை, அவனுக்கு வேறு ஏதேனும் நடந்துவிட்டதா என்ற குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கும் அவனது தாய் செல்வி, மகனை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதவ வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருக்கிறார்.

மகன் இதற்கு முன்னர் அனுப்பிய வாட்ஸ்-அப் வாய்ஸ் மெசேஜ்களை அவ்வப்போது போட்டுக் கேட்டு ஆறுதல் பட்டுக்கொள்ளும் இவர்கள், என்றைக்காவது மகன் தங்களை தொடர்புகொள்வான் என்ற நம்பிக்கையில் அவருக்கு தொடர்ச்சியாக தாங்களும் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பி வருகின்றனர்.

இடதுபுறம்: மாலுமி நவீன்
இடதுபுறம்: மாலுமி நவீன்Reuters

பொலிவியா நாட்டின் கொடியை ஏந்திய பிரிட்ஜ் 1 மற்றும் பிரிட்ஜ் 2 ஆகிய கப்பல்களில் நவீன் பணிக்குச் சென்றதாகவும், சர்வதேச மருத்துவ அலுவலகமான ஐ.எம்.ஓ.வில் இந்த சம்பவங்கள் பட்டியலிடப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறது ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம்.

மூன்று ஈராக் நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒரு பாகிஸ்தானியர் மற்றும் ஓர் இந்தியருடன் சென்ற இந்தக் கப்பல்கள், கடந்த 9ஆம் தேதி வாக்கில், ஈரானின் கீஷ் தீவில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் இருந்து தங்களின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டதாக தெரிவிக்கிறது ஈராக் கடல்சார் அறக்கட்டளை. அப்போதே கப்பல்களைத் தேட முயன்றதாகவும், ஆனால், தங்களுக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும், குறிப்பாக கப்பலில் இருந்து ஆபத்து சமிக்ஞைகள் எதுவும் பெறப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரானுடனான அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுப் படை தாக்குதலில் தற்போது வரை 25 மாலுமிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், 130-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இதுவரை இல்லாத அளவிலான தாக்குதல்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகளவில் பதிவானதாக தெரிவிக்கிறது ராய்ட்டர்ஸ். தங்கள் பிள்ளையின் வாழ்க்கை, எதிர்காலத்திற்காக அயராது உழைத்தோம், ஆனால், இப்போது எங்கள் வாழ்க்கை இந்த நிலைக்கு வந்துவிட்டது என ஆற்றா துயரில் அழுகிறார் நவீனின் தாய். என்றைக்காயினும் மகன் திரும்பி வருவான் என்பதே பாண்டிச்செல்வியின் ஒரே நம்பிக்கையாக உள்ளது.