விரைவுச் செய்திகள்: பாராலிம்பிக் - இந்தியாவுக்கு பதக்கங்கள் | சீனாவில் வெள்ளப்பெருக்கு

விரைவுச் செய்திகள்: பாராலிம்பிக் - இந்தியாவுக்கு பதக்கங்கள் | சீனாவில் வெள்ளப்பெருக்கு
விரைவுச் செய்திகள்: பாராலிம்பிக் - இந்தியாவுக்கு பதக்கங்கள் | சீனாவில் வெள்ளப்பெருக்கு

ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்: பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம் கிடைத்தது. தேவேந்திரா வெள்ளி பதக்கமும்,
சுந்தர் சிங் வெண்கலமும் வென்று அபார வெற்றி பெற்றனர்.

பாராலிம்பிக் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் அவனி லெகாரா. 10 மீட்டர்
ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் அவனி லெகாராவுக்கு தங்கம் கிடைத்தது.

பாராலிம்பிக் - வெள்ளி வென்றார் யோகேஷ் கத்தூனியா: டோக்கியோ பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளி வென்றார் யோகேஷ் கத்தூனியா. இதுவரை ஒரு
தங்கம், 4 வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

கொரோனா தடுப்பு - முதல்வர் இன்று ஆலோசனை: கொரோனா நிலவரம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிகிறார்.

சுங்கக் கட்டணம் இன்றி செல்லும் வாகனங்கள்: சென்னை OMR சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து அமலுக்கு வந்தது. சுங்கக்கட்டண வசூல்
இல்லாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கோடநாடு - அரசு தரப்பு சாட்சி மேல்முறையீடு: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி அரசு தரப்பு சாட்சியான அனுபவ்
ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

மனநல பரிசோதனைக்காக அழைத்து சென்ற காவல்துறை: பெற்றக் குழந்தையை கொடூரமாக தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த துளசி மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்பதை கண்டறிய மருத்துவபரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

பவானிசாகர் - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனையில் ரூ.5 கோடி சிக்கியது: சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே கார்களில் கொண்டுசெல்லப்பட்ட 5 கோடி ரூபாய் கட்டுக்கட்டாக பறிமுதல்
செய்யப்பட்டது. இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் - கொடூரன் கைது: சென்னையில் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ எடுத்த கொடூரன் கைது செய்யப்பட்டார்.
உடந்தையாக இருந்ததாக 2 பெண்களையும் போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறை கைது செய்தது.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையையொட்டி வட மாநிலங்களில் கோயில்களில் வழிபாடு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கொண்டாடி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது இந்தச் சோக சம்பவம் நேரிட்டது.

3 பேர் மீது வழக்குப்பதிவு - ஒருவர் கைது: மதுரையில் கட்டுமானப் பணியின்போது மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மூன்றுபேர் மீது காவல்துறையினர்
வழக்குப்பதிவு செய்தனர். ஹைட்ராலிக் இயந்திர ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கேரளாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

தற்கொலைப்படை வாகனத்தை தாக்கிய அமெரிக்கா: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப்படை வாகனம்மீது தாக்குதல்
நடத்தியதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. வான்வெளி தாக்குதலில் கட்டடம் ஒன்றும் சேதமடைந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: இத்தாலி நாட்டின் மிலன் நகரில் 20 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை
அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதிப்பு: சீனாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். 23,000க்கும் அதிகமானோர்
பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com