காலை 6 மணில இருந்து ஏவுகணை தாக்குதல்தான்.. இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், அங்குள்ள சில தமிழர்கள் பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல்  தமிழர்கள்
இஸ்ரேல் தமிழர்கள்புதிய தலைமுறை

இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், அங்குள்ள சில தமிழர்கள் பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ”காலை 6 மணியில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது. எப்போதும் 1 மணி நேரத்தில்
முடிந்துவிடும். ஆனால், தற்போது கடுமையாக மாறிவிட்டது.
காலை 6 மணிக்கு தொடங்கிய போர் மதியம் 1 வரை நீடித்தது.
இஸ்ரேலின் ராணுவ படை காசா பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
எங்களுடைய நிறுவனத்தில் மட்டும் 10 தமிழர்கள் இருக்கிறோம்.
சென்னை அலுவகத்தில் இருந்து எங்களை தொடர்பு கொண்டார்கள். வெளியுறவு அமைச்சகத்தில் இருந்தும் தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் மற்றும் விசாவை அனுப்ப சொன்னார்கள்.
தமிழ்நாடு அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம் இருவருமே எங்களிடம் பேசி கொண்டுதான் உள்ளனர். எனவே நாங்கள் பத்திரமாகத்தான் உள்ளோம்” என்று அங்குள்ள தமிழர்கள் சிலர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com