நீதிபதியை கொல்ல முயற்சி - மர்மநபர்களுக்கு போலீசார் வலை

நீதிபதியை கொல்ல முயற்சி - மர்மநபர்களுக்கு போலீசார் வலை

நீதிபதியை கொல்ல முயற்சி - மர்மநபர்களுக்கு போலீசார் வலை
Published on

யாழ்ப்பாணம் அருகே நீதிபதி இளஞ்செழியனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயன்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இலங்கை யாழ்பா‌ண மேல் நீதிமன்ற நீதிபதியாக உள்ளவர் இளஞ்செழியன். இவர் தன் மெய்க்காப்பாளர்களுடன் யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூர் பகுதியில் காரில் சென்றுக்கொண்டிருந்த போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்து காரை வழிமறித்த மர்மநபர்கள் இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இளஞ்செழியனின் மெய்க்காப்பாளர்கள் இருவர் படுகாயமடைந்தனர். ஒருவரின் தோள்பட்டையிலும், மற்றொருவரின் வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மர்மநபர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் துப்பாக்கி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த யாழ்ப்பாணம் போலீசார், தப்பியோடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com