\
ஆத்தாடி! ஜேம்ஸ் பாண்ட் ஹீரோவுக்கு ரூ.449 கோடி சம்பளம்

ஆத்தாடி! ஜேம்ஸ் பாண்ட் ஹீரோவுக்கு ரூ.449 கோடி சம்பளம்

ஆத்தாடி! ஜேம்ஸ் பாண்ட் ஹீரோவுக்கு ரூ.449 கோடி சம்பளம்
Published on

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்கும் டேனியல் கிரெய்க்குக்கு 449 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு என உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. படம் வெளியாகும் சமயத்தில் புதிய வசூல் சாதனையை படைக்கும் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் 50 வயதான டேனியல் கிரெய்க், அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்க இருப்பதை கடந்த வாரம் உறுதி செய்தார். 2019-ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்துக்காக அவருக்கு 449 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

முன்னதாக ஸ்பெட்டர் படத்தில் நடித்த டேனியல் கிரெய்க்குக்கு 332 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளது. இதில் டேனியல் கிரெய்க் நடிக்கும் ஒரு நிமிடக் காட்சிக்கு மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com