\
ஆப்கானில் தலிபான் தற்கொலைப் படை தாக்குதல்: எட்டு வீரர்கள் உயிரிழப்பு; பலர் படுகாயம்

ஆப்கானில் தலிபான் தற்கொலைப் படை தாக்குதல்: எட்டு வீரர்கள் உயிரிழப்பு; பலர் படுகாயம்

ஆப்கானில் தலிபான் தற்கொலைப் படை தாக்குதல்: எட்டு வீரர்கள் உயிரிழப்பு; பலர் படுகாயம்
Published on

(கோப்பு புகைப்படம்)

ஆப்கானிஸ்தானில் ராணுவத் துருப்புகளைக் குறிவைத்து குண்டுகள் நிரம்பிய வாகனம் மூலம் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதில் எட்டு வீரர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக ஆப்கன் படையினருக்கும் தலிபான்களுக்கும் கடும் மோதல் நடைபெற்று வருகிறது. சிறையில் உள்ள தலிபான்களை விடுவிக்க வலியுறுத்தி, தொடர்ந்து அவர்கள் அரசுப் படைகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர்.

திங்களன்று வார்டாக் மாகாணத்தில் உள்ள சையத் அபாத் மாவட்டத்தில் அரசுப் படையினருக்கு எதிராக இந்த தற்கொலைப் படை கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com