ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணையம் கலைப்பு - தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணையம் கலைப்பு - தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணையம் கலைப்பு - தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையத்தை கலைத்துள்ளனர் தலிபான்கள்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய நாள்முதல் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள் தலிபான்கள். இந்நிலையில், தற்போது திடீர் திருப்பமாக ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையத்தை தலிபான்கள் கலைத்துள்ளனர். தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் புகார் ஆணையம் ஆகிய இரு அமைப்புகளையும் தலிபான் அரசு கலைத்துள்ளது.
 
இது தொடர்பாக தலிபான்கள் அரசின் செய்தித்தொடர்பாளர் பிலால் கரீமி கூறுகையில், ''ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலையில் இது தேவையற்ற ஆணையங்கள். எதிர்காலத்தில் இந்த ஆணையங்கள் தேவைப்பட்டால் அப்போது அதை அரசு மீண்டும் கொண்டு வரும்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com