உலகம்
கந்தகார் ராணுவ முகாமில் தலிபான் அட்டாக்: 43 வீரர்கள் பலி
கந்தகார் ராணுவ முகாமில் தலிபான் அட்டாக்: 43 வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 43 வீரர்கள் பலியாயினர்.
ஆப்கானிஸ்தானில் கந்தகார் மாகாணத்தில் இருக்கிறது மைவாண்ட் மாவட்டம். இங்குள்ள சாஸ்மோ பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. இங்கு 2 கார்களில் வந்த தலிபான் தற்கொலை படையினர் அதை வெடிக்கச் செய்தனர். இதில் 60 ராணுவ வீரர்கள் பலியானதாக தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆப்கான் அரசு, 43 ராணுவ வீரர்கள் பலியானதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த முகாம், ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு படை வசம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்தும் மூன்றாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.